தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் மாதம்பட்டி ரங்கராஜின் பயோபிக் ஆக இருக்கும் என மீம்ஸ் பரவி வந்த நிலையில், அதுபற்றி தனுஷே விளக்கம் அளித்திருக்கிறார்.
தனுஷ் ஹீரோவாக மட்டுமின்றி இயக்குனராகவும் கலக்கி வருகிறார். பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
24
இட்லி கடை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி
நடிகர் தனுஷ் வழக்கமாக தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் அதன் புரமோஷனில் பெரியளவில் கவனம் செலுத்த மாட்டார். ஆடியோ லாஞ்சில் மட்டும் பங்கேற்பார். ஆனால் இட்லி கடை படத்திற்கு அவர் பம்பரம் போல் சுழன்று புரமோஷன் செய்து வருகிறார். இப்படத்தின் ஆடியோ லாஞ்ச முடிந்த கையோடு, டிரெயிலர் லாஞ்ச் நிகழ்ச்சியை கோவையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். இதையடுத்து மதுரைக்கு சென்ற தனுஷ், அங்கும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தினார். அடுத்ததாக திருச்சியில் நேற்று இட்லி கடை படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. தனுஷ் உள்பட படக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
34
பரிதாபங்கள் கோபி - சுதாகர்
திருச்சியில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பரிதாபங்கள் யூடியூப் சேனலை நடத்தி வரும் கோபியும் சுதாகரும் கலந்துகொண்டனர். அவர்கள் மேடையேறி, நடிகர் தனுஷிடம் சில கேள்விகளை கேட்டனர். அதன்படி தனுஷ் தான் சிறுவயதில் குடும்ப கஷ்டத்தால் இட்லி வாங்க கூட காசில்லாமல் இருந்ததாக ஆடியோ லாஞ்சில் கூறியதை சுட்டிக்காட்டி, உங்க அப்பா இயக்குனராக இருந்தும் கஷ்டப்பட்டீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தனுஷ், என்னுடைய அப்பா இயக்குனர் ஆனது 1991-ல் தான், நான் பிறந்தது 1983-ல், அதனால் ஒரு 8 ஆண்டுகள் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து கோபி ஒரு கேள்வியை கேட்டார். இது கோவை சேர்ந்த ஒரு செஃபின் (மாதம்பட்டி ரங்கராஜ்) வாழ்க்கை வரலாறுனு சொல்றாங்க அது உண்மையா என கேட்டார். அதற்கு தனுஷ், அதெல்லாம் இல்லை இது என்னுடைய கற்பனை கதை, அதில் என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த சில மனிதர்களின் கதாபாத்திரங்களை வைத்து எடுத்துள்ளதாக கூறினார். இதன்மூலம் இது மாதம்பட்டி ரங்கராஜின் பயோபிக் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனபோது சில மாதம்பட்டி ரங்கராஜோடு தனுஷின் சில புகைப்படங்கள் ஒப்பிட்டு நெட்டிசன்கள் வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.