இயக்குனர் ராஜமௌலி மகாபாரதம் படத்தை மட்டும் எடுக்க விரும்பவில்லை, அவருக்கு இன்னொரு கனவு திட்டமும் உள்ளது. அது என்ன தெரியவந்துள்ளது. அவரே அதைப்பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இயக்குனர் ராஜமௌலியின் கற்பனைத்திறனுக்கு ஈடு இணையில்லை. அவர் திட்டமிட்டால் அது உச்சத்தில் இருக்கும். வேறு எந்த இயக்குனரும் செய்யமுடியாத அளவுக்கு அவருடைய திட்டங்கள் உள்ளன. அவருக்கு மகாபாரதத்தை படமாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதை ஐந்து பாகங்களாக எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். இதை அவர் முன்னதாகவே அறிவித்தார்.
27
Baahubali director Rajamouli
ராஜமௌலி தனது கனவுத் திட்டத்திற்கு ஆயத்தமாகும் வகையில், ‘ஈகா’, ‘மகதீரா’, ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போறன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். தற்போதைய மகேஷ் பாபு படமும் அதில் ஒரு பகுதிதான். மகாபாரதம் படத்தை ‘அவெஞ்சர்ஸ்’, ‘அவதார்’ போன்று உலக சினிமா உலகமே வியக்கும் வகையில் எடுக்க வேண்டும் என்பதே ராஜமௌலியின் திட்டம்.
37
Director Rajamouli next movie
சமீபத்தில் அவர் தனக்கு இன்னொரு கனவு திட்டம் உள்ளது என்றும் கூறியுள்ளார். 'பாகுபலி' அனிமேஷன் திரைப்பட வெளியீட்டை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றிப் பேசினார்.
47
Rajamouli animation movie
அனிமேஷன் படம் எடுக்க வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாகவும், அதற்காகவே 'பாகுபலி' அனிமேஷன் படத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இந்தப் படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் தெரிவித்தார். பிரமாண்டமான அனிமேஷன் படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், இப்போது பார்வையாளர்கள் அப்படிப்பட்ட படங்களை விரும்புவதாகவும் அவர் கூறினார்.
57
Baahubali Animation by Rajamouli
எல்லோரையும் போல எல்லாவிதமான படங்களையும் செய்து தன்னை நிரூபிக்க விரும்புவதாக ராஜமௌலி கூறினார். வருங்காலத்தில் அனிமேஷன் படங்கள் பண்ணுவேன் என்றும் குறிப்பிட்டார்.
67
Rajamouli dream project
பாகுபலி 3ஆம் பாகத்தை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். `ஆர்ஆர்ஆர்' படத்திற்கும் மற்றொரு பாகம் இயக்க விரும்புவதாகவும் கூறுகிறார். மகேஷ் பாபுவின் படத்திற்கு பிறகு பாகுபலி 3 வரவுள்ளது என்று சொன்ன அவர், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் சொல்லவில்லை.
77
மகேஷ் பாபுவை ஹீரோவாக வைத்து ராஜமௌலி தற்போது ``SSMB29` என்ற படத்தை எடுக்கிறார். புதிய பார்வையாளர்கள் படம் பார்க்க வரவேண்டும் என்ற இலக்குடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. ஆப்ரிக்க காடுகளின் பின்னணியில் இப்படம் இருக்கும் என்றும் மகேஷ் பாபு சாகச பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.