ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விநாயகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். இதுதவிர தமன்னா, வஸந்த் ரவி, யோகிபாபு, எதிர்நீச்சல் மாரிமுத்து, மிர்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. குறிப்பாக காவாலா மற்றும் ஹுகூம் ஆகிய பாடல்கள் வைரல் ஹிட் ஆகி இருக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சுக்கு கிடைத்த வரவேற்பால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இப்படம் சோலோவாக ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாமன்னன் ‘ரத்னவேலு’ பகத் பாசிலை கொண்டாடுபவர்கள்... சாதிய மனநோயாளிகள் - சவுக்கடி கொடுத்த வன்னிஅரசு
jailer
அப்படி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தாலும், இப்படத்தின் முதல் நாள் வசூலுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஜெயிலர் படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்பட வாய்ப்பில்லையாம், இதனால் இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படும் என கூறப்படுகிறது. இதனால் ஜெயிலர் படத்தில் முதல் நாள் கலெக்ஷன் பயங்கரமாக அடிவாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
jailer
ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் அதிகாலை 4 மணிக்காட்சி திரையிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஜனவரி மாதம் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் ரிலீஸ் ஆனபோது இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி துணிவு பட கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இனி எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படக்கூடாது என அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இதையடுத்து கடந்த 7 மாதங்களாக எந்த நடிகரின் படத்திற்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை. இதே ரூல்ஸ் தான் தற்போது ஜெயிலர் படத்திற்கும் பின்பற்றப்பட இருப்பதால், இப்படத்தின் முதல் நாள் வசூல் கம்மியாகவே இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை ஜெயிலர் படம் முறியடிப்பதும் கஷ்டம் என்றே கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சலை தட்டிதூக்க வருகிறது புது சீரியல்... அதுவும் 90ஸ் கிட்ஸோட பேவரைட் சீரியலின் இரண்டாம் பாகம்!