vanniarasu, Fahadh Faasil
மாமன்னன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் மீண்டும் சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம், அதில் இடம்பெற்ற பகத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரம் தான். சாதி வெறி பிடித்த அரசியல்வாதியாக தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பகத் பாசில். அவரின் மாஸ் ஆன காட்சிகளை எல்லாம் எடிட் செய்து, அதை பல்வேறு சாதியினர் தங்கள் சாதி பெருமை பேசும் பாடல்களுடன் பதிவிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததிலிருந்து சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு, என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள். அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர். இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.
அதாவது, நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர். அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப்பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான். ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என வன்னிஅரசு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சலை தட்டிதூக்க வருகிறது புது சீரியல்... அதுவும் 90ஸ் கிட்ஸோட பேவரைட் சீரியலின் இரண்டாம் பாகம்!