செர்ரி பழம் போல் சிவந்திருக்கும் சிவப்பு நிற உடையில்... அழகால் இளம் நெஞ்சங்களை அள்ளும் நிவேதா பெத்துராஜ்!!

Published : Sep 20, 2021, 05:54 PM IST

நடிகை நிவேதா பெத்து ராஜ் தற்போது சிவப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
செர்ரி பழம் போல் சிவந்திருக்கும் சிவப்பு நிற உடையில்... அழகால் இளம் நெஞ்சங்களை அள்ளும் நிவேதா பெத்துராஜ்!!

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

 

 

28

இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.

 

 

38

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜ் அங்கே தீவிர படவேட்டை நடத்திய நிலையில், சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

 

 

48

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் அவ்வப்போது துளியும் கவர்ச்சி காட்டாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

 

58

தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

 

 

68

லாக் டவுன் நேரத்தில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிவேதா பெத்துராஜ் தற்போது மீண்டும் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு பட வேட்டையை துவங்கியுள்ளார்.

 

 

78

அந்த வகையில் சும்மா, செர்ரி பழம் போல் சிவந்திருக்கும் சிவப்பு நிற உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

88

தன்னுடைய உடைக்கு ஏற்ற போல், மிதமான மேக்அப் மற்றும் ஆடை அலங்காரங்களுடன் கொள்ளை அழகில் இளம்  ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

 

 

click me!

Recommended Stories