கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழிலும் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கைவசம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக உள்ள ராஷ்மிகாவுக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளன.