தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்’ , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கலக்கினார்.
எஸ்.ஏ.சூர்யாவின் “மான்ஸ்டர்” படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் “மாஃபியா” படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தனது போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது பாலைவனத்தில் அசத்தலாக தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
ஸ்லீவ் லெஸ் டாப் அணிந்திருக்கும் பிரியா பவானி சங்கர் அதன் மீது அழகிய சால் போன்ற ஒன்றை போட்டு கவர் செய்திருக்கிறார். இருந்தாலும் அதில் அவர் உடைய தோள் பட்டை முழுவதும் தெரிகிறது.
கண்ணில் அழகான கூலிங் கிளாஸ் உடன் பாலைவான மணலில் அமர்ந்த படி பிரியா பவானி ஷங்கர் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
கிழிந்த பேண்ட் உடன் ஜம்முன்னு மணலில் அமர்ந்து போஸ் கொடுத்திருக்கும் பிரியா பவானி சங்கரின் போட்டோவை பார்த்து, ரசிகர் ஒருவர், லைட்டா அப்பர் சோல்டர் தெரியுது. போச்சு யூ-டியூப்பில் ஸ்டார்ட் பண்ணப்போறாங்க. படவாய்ப்பிற்காக பிரியா பவானி ஷ்ங்கர் கவர்ச்சி போட்டோ ஷூட் அப்படின்னு போடுவாங்க என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.