மீண்டும் செல்வராகவனுக்கு வந்த சோதனை! 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீசுக்கு தடை!

First Published Mar 2, 2021, 3:52 PM IST

செல்வராகவன் இயக்கி முடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
 

கடைசியாக சூர்யாவை வைத்து செல்வராகவன் எடுத்த "என்.ஜி.கே." படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பின்னர் தனது தம்பி தனுஷை வைத்து "புதுப்போட்டை 2" படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் "இரண்டாம் உலகம்-2", "ஆயிரத்தில் ஒருவன் 2" என அடுத்தடுத்து செல்வராகவன் பிரம்மாண்ட பிளான் போட்டு வைத்துள்ளார்.
undefined
இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கி, கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் இருந்த செல்வராகவனின் "நெஞ்சம் மறப்பதில்லை" ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ சில தினங்களுக்கு முன் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியானது.
undefined
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. 2017ம் ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய அப்படம் நிதி நெருக்கடி காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
undefined
திகில் கதை அம்சம் கொண்ட அப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இடையே வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் 3 பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அப்போது கூட பட ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை" திரைப்படம், உலகம் முழுவதும் மார்ச் 5 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
இதனால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீசுக்கு நீதி மன்றம் தடை விதித்துள்ளது. தடை கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் தாக்கல் செய்ய பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது, என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2.42 கோடி கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1.75 கோடி ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1.24 கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
undefined
தங்களுக்கு தர வேண்டிய மீதமுள்ள பணத்தை வட்டியுடன் செலுத்தும் வரை, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மார்ச் 5 ஆம் தேதி ரிலீசாக இருந்த இந்த படத்திற்கு தற்போது இடைக்கால தடை விதித்துள்ளார். 'சக்ரா' படத்திற்கும் இதே போன்ற சோதனைகள் வந்த போதிலும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியானதால் இந்த படமும் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
click me!