மனதை மயக்கும் மஹாராணி போல்... பளபளக்கும் உடையில் பளீச் போஸ்! சுண்டி இழுக்கும் பிரியா பவானி ஷங்கர்!

First Published Mar 2, 2021, 3:21 PM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர், அசப்பில் அழகு மஹாராணி போல்... கண்ணை பறிக்கும் பளீச் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.
undefined
பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.
undefined
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்’ , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கலக்கினார்.
undefined
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், சமீபத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ருத்ரன் படத்தில் கமிட்டாகியுள்ளார். முன்னணி நடிகைகளை விட இவருடைய கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
undefined
அப்படி ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
வெள்ளை நிற பளபளக்கும் சல்வாரில்... நகைகள் அணிந்து, அசப்பில் மஹாராணி போல் காட்சி அளிக்கிறார் பிரியா பவானி. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
undefined
click me!