விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன், கடந்த 2010-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் உருவான வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அப்படம் கைவிடப்பட்டதால், சில ஆண்டுகள் பட வாய்ப்பின்றி தவித்த நெல்சனுக்கு நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படம் ஒரு திருப்புமுனையை தந்தது.
இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வெற்றிகண்ட நெல்சன், அடுத்ததாக விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் படத்தை புரமோட் செய்யும் விதமாக தமிழில் விஜய்யுடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் நெல்சன். இதுதவிர இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதால் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளுக்கான புரமோஷனும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் விஜய் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் நெல்சன், அனிருத், பூஜா ஹெக்டே ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
இதுதவிர ஏராளமான பேட்டிகளும் கொடுத்து வருகிறார் இயக்குனர் நெல்சன். அதில் ஒவ்வொரு பேட்டியிலும் அவர் மாத்தி மாத்தி பேசுவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. முதலில் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் ஹாலிவுட்டில் பிரபலமான ஜான் விக் கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டது என தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது போக்கிரி படத்தில் வரும் கதாபாத்திரத்தின் தாக்கத்தால் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் விஜய்யின் வீரராகவன் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளதாக கூறி இருக்கிறார். இவ்வாறு நெல்சன் மாத்தி மாத்தி பேசுவதை பார்த்தால் இன்னும் எத்தனை படங்களின் இன்ஸ்பிரேஷனில் பீஸ்ட் உருவாகி இருக்கிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
நெல்சன் இவ்வாறு சொன்னாலும் பீஸ்ட் படத்தின் கதை கூர்கா படத்தின் கதையைப் போன்று இருப்பதாக டிரைலர் ரிலீசானபோதே நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Thalapathy 66 : தளபதி 66 படம் குறித்து ஷாக்கிங் அப்டேட்டை வெளியிட்ட விஜய்... அப்போ அதெல்லாம் பொய்யா?