பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு பின் விஜய் நடிப்பில் உருவாக உள்ள படம் தளபதி 66. வம்சி இயக்க உள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிக்க உள்ள இப்படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவர் நடிகர் விஜய்யுடன் நடிக்க உள்ள முதல் படம் இதுவாகும்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். மேலும் பாடலாசிரியர் விவேக், இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்ற உள்ளார். இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராக உள்ளதாகவும், இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யுடன் நடத்திய நேர்காணலில் தளபதி 66 படம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.