நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்துள்ளார். அவர் அடுத்ததாக சினிமாவில் களமிறங்க உள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. அவர் நடிகராக அறிமுகமாகலாம் அல்லது இயக்குனராக அறிமுகமாகலாம என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யுடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது அவர் விஜய்யின் குடும்பம் பற்றியும் சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக மகன் சஞ்சய் குறித்தும் விஜய்யிடம் கேட்டார். சஞ்சய், அடுத்ததாக என்ன செய்ய போகிறார், அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விஜய், அவர் மனசுல என்ன இருக்குனு தெரியல. நான் அவரை வற்புறுத்த மாட்டேன். அவருக்கு புடிச்சத பண்ணட்டும்னு விட்டுட்டேன். ஒரு முறை பிரேமம் படத்தோட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னை சந்திக்க எனது வீட்டுக்கு வந்தார். ஒரு கதை சொல்லனும்னு சொன்னார். சரி சொல்லுங்கனு சொன்னேன். அப்பறம் தான் உங்க பையன் கிட்ட சொல்லனும்னு சொன்னார்.