சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை இயக்குனர் எச்.வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் தயாரித்திருந்தார்.
28
valimai
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ள இந்த படத்தில் காலா பட நடிகை ஹூமா குரேஷி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
38
valimai
போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ள இந்த படத்தில் இடம்பெற்ற, பைக் ரேஸ் காட்சிகள், சண்டைகாட்சிகள் சென்டிமெண்ட் போன்றவை ரசிர்கர்களை கவர்ந்திருந்தாலும் கலவையான விமர்சங்களையே பெற்றது.
48
valimai
கடந்த பிப்ரவரி 24 ம்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிய வலிமை வசூல் ரீதியில் நல்ல வெற்றியை பெற்றது .
58
valimai
சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில், உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூலித்ததை அடுத்து தற்போது ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது.
68
valimai
வலிமை படப்பிடிப்பில் இருக்கும் பொழுதே எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் AK61 படம் தயாராகவுள்ளது குறித்து அறிவிப்பு வெளியானது.
78
Ajith 61
நடிகர் நடிகைகள் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் “கடந்த வாரம் அஜித் தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார். இதையடுத்து ஷூட்டிங் நாளை ஆரம்பமாகும் என்றும் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் கூறப்படுகிறது.
88
Ajith 61
அதோடு ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் மவுண்ட் ரோடு போன்ற ஒரு பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு குழு படத்தின் பெரும்பகுதியை படமாக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த செட்டின் மூலம் இந்த படம் ஒரு வங்கியைச் சுற்றி நடக்கும் கதை என தெரிகிறது.