பீஸ்ட் ஞாபகம் வந்திருச்சோ...! நைசாக ஏப்ரல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர்?

Published : Jan 24, 2023, 12:56 PM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் ரிலீசை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

PREV
14
பீஸ்ட் ஞாபகம் வந்திருச்சோ...! நைசாக ஏப்ரல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர்?

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த படத்தில் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி, முதன்முறையாக நெல்சன் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

24

நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ராக்கி பட ஹீரோ வஸந்த் ரவி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இதையும் படியுங்கள்... இன்று வெளியாகிறது ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல்! அதகளம் செய்ய காத்திருக்கும் RRR - 6 பிரிவுகளில் தேர்வாக வாய்ப்பு?

34

இதுதவிர மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதுவரை 60 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஆக்ஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. 

44

நெல்சன் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகி தோல்வியை சந்தித்தது. அந்த செண்டிமெண்டால் ஜெயிலர் படத்தை தள்ளிவைத்தார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. ஒரு சிலரோ, ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளதால் தள்ளிவைத்துள்ளார்கள் எனவும் கூறி வருகின்றனர். ஆனால் ஜெயிலர் படக்குழு இதுகுறித்து எதையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் செல்லமே.... பிக்பாஸ் வெற்றியை மகனுடன் சேர்ந்து ஜாலியாக கொண்டாடிய அசீம்

Read more Photos on
click me!

Recommended Stories