தெலுங்கு திரையுலகில், 62 வயதிலும் இளம் ஹீரோக்களை மிஞ்சும் வகையில்... ஆக்ஷன், ரொமான்ஸ், டூயட் என தன்னுடைய படங்களை களைகட்ட வைத்து வருகிறார் பாலையா.
டோலிவுட் திரையுலகையில் இவர் அழைப்பு விடுத்தது, எந்த ஹீரோயினாவது அந்த பட வாய்ப்பை ஏற்கவில்லை என்றால், டோலிவுட் திரைப்படங்களில் அவர்கள் நடிப்பதே கேள்விக்குறியாகிவிடும். எனவே இவரிடம் இருந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால், உடனே ஓகே என கூறி விடுவார்கள். சம்பள விஷயத்திலும் பாலையா படு தாராளம்.
மேலும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தங்கையாகவும், வில்லியாகவும், மிரட்டி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் 108வது படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
மேலும் இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, பாலையாவுக்கு அம்மாவாகவும், ஜோடியாகவும் நடித்த... ஹனி ரோஸ் இந்த படத்திலும் கமிட் ஆகியுள்ளார். அதே பிரியங்கா ஜவால்கரும் இணைந்துள்ளார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தை அனில்ரவிபொடி இயக்க உள்ளார். இந்த படம் ஆயுத பூஜை படத்தின் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.