Rocky movie : ஓடிடி-யில் விலைபோகாத நயன்தாரா படம்.... இதென்னப்பா லேடி சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை?

First Published | Jan 21, 2022, 10:01 AM IST

ரெளடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை தொடங்கிய நயன்தாரா, அதன்மூலம் படங்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களை வெளியிட்டும் வருகிறார். 

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 வருடமாக காதலித்து வருகின்றனர். காதலைப் போல் சினிமாவிலும் ஜொலித்து வரும் இவர்கள், கடந்த 2020-ம் ஆண்டு ரெளடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை தொடங்கினர். அந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை தயாரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் சில படங்களை வெளியிட்டும் வருகின்றனர். 

அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' (Rocky) படத்தின் வெளியீட்டு உரிமையையும் அவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு கைப்பற்றினர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டாக வெளியாகாமல் இருந்த இப்படம் அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வந்தது.

Tap to resize

இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. ரஜினி, தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். குறிப்பாக விக்னேஷ் சிவன், நயன்தாராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய ரஜினி, நடிகர் வஸந்த் ரவி, இயக்குனர் பாரதிராஜா ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.

rocky movie

தற்போதுள்ள விதிப்படி திரையரங்கில் வெளியாகும் படங்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் ஓடிடி-யில் வெளியிடப்படும். அந்தவகையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், ராக்கி படம் மட்டும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில், அது பற்றி விசாரித்தபோது, அப்படம் ஓடிடி-யில் எதிர்பார்த்த விலைக்கு போகாததால், படக்குழுவினர் அப்படத்தை ஓடிடி-யில் தற்போதைக்கு வெளியிட வில்லையாம். நயன்தாரா வெளியிட்ட படம் ஓடிடி-யில் விலைபோகாதது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.

Latest Videos

click me!