அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன், அப்படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டதை அடுத்து தற்போது புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் லவ் டுடே என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு எல்.ஐ.சி என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் இந்தக்கதையில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்படம் அறிவிப்போடு நின்றுபோனது. இதையடுத்து தற்போது அதே கதையடி பிரதீப் ரங்கநாதனுக்கு சொல்லி ஓகே வாங்கி உள்ள விக்கி. அப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... "The Elephant Whisperers" இயக்குனருக்கு ரூ1 கோடி ஊக்கத்தொகை..! மு.க.ஸ்டாலின் கவுரவிப்பு
விக்கி - பிரதீப் இணையும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. தற்போது பிரதீப் ரங்கநாதன் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறதாம். அந்தவகையில், இப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவும் கமிட் ஆகி உள்ளாராம். ஆனால் அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனவும், படத்தில் அவர் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.