தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து மோகன் ராஜா இயக்கிய வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
இதனால் குறுகிய காலத்திலேயே நடிகர்கள் சூர்யா, விஷால், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற டாப் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார்.
இதையடுத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை சட்டென குறைத்து ஸ்லிம் ஆன ஹன்சிகா, மீண்டும் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இதனிடையே இவருக்கும் சோஹைல் கதூரியா என்பவருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்பும் படங்களில் பிசியாக நடித்து வரும் ஹன்சிகா, கேப் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தனது காதல் கணவருடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிடுகிறார். அந்த வகையில் தற்போது ஹன்சிகாவும், சோஹைலும் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர்.