அடுத்த அதிரடி... காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை...!

தற்போதை சொந்த படத்தை எல்லாம் தாண்டி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கோலிவுட்டில் தடம் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட, புதுமுகங்களின் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.
தற்போது நயன்தாராவும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு முழு வீச்சில் பாடுபட்டு வருகிறார். சத்தம் இல்லாமல் இருந்த ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தீயாய் வேலையை ஆரம்பித்துள்ளார்.

நயன்தாராவின் “நெற்றிக்கண்” படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்து வரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு இணை தயாரிப்பாளராக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது. தற்போதை சொந்த படத்தை எல்லாம் தாண்டி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கோலிவுட்டில் தடம் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட, புதுமுகங்களின் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' படத்தின் விநியோக உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.
தற்போது கூழாங்கல் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகிறது.
அதில், “மிக அரிதான ஒரு நாள்தான், ஒரு படைப்பை பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிகட்ட பணிகளில் இருந்த "கூழாங்கல்" எனும் திரைப்படத்தைப் பார்த்த போது தோன்றியது.கூழாங்கல், P. S. வினோத்ராஜின் முதல் படம். தலைப்பை போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது”
“முழுக்க முழுக்க திறமையான புது குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தை பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் திரு. யுவன் ஷங்கர் ராஜா "இப்படத்தின் மூலமாக எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை, நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பை பொறுப்பேற்றுள்ளோம். "உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளனர்.

Latest Videos

click me!