தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகியாக கோலோச்சி வரும் நயன்தாரா, இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் டாப் 10 மூவீஸ் பற்றி பார்க்கலாம்.
ஹரி இயக்கிய ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நயன்தாரா. அவர் அறிமுகமான முதல் படமே பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. அதுவும் அப்படத்தில் நயன்தாரா ஆடிய ஒரு ‘வார்த்தை சொல்ல’ பாடல் வைரல் ஹிட் அடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஐயா படம் ஹிட் ஆனதும் அடுத்ததாக நயன்தாராவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் சந்திரமுகி திரைப்படம். பின்னர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என தொடர்ச்சியாக முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக ஜொலித்தார்.
25
நயன்தாரா பிறந்தநாள்
நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நாயகியாகவும் ஜொலித்து வருகிறார். அவருக்கு தற்போது 41 வயது ஆனாலும் இன்னும் இளமை குறையாமல் இருப்பதால் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது பான் இந்தியா அளவில் செம பிசியான நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. இன்று அவர் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவர் நடித்து பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்களைப் பற்றி பார்க்கலாம்.
35
நயன்தாரா டாப் 10 மூவீஸ்
நயன்தாரா நடித்து அதிக வசூல் அள்ளிய படங்களில் முதலிடத்தில் உள்ளது ஜவான் தான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1152 கோடி வசூலை வாரிக்குவித்தது. தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் அள்ளிய முதல் ஹீரோயினும் நயன்தாரா தான். இரண்டாவது இடத்தில் பிகில் படம் உள்ளது. இதையும் அட்லீ தான் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.304 கோடி வசூல் அள்ளியது.
மூன்றாவது இடத்தில் சிரஞ்சீவி உடன் அவர் நடித்த தெலுங்கு படமான சைரா நரசிம்மா ரெட்டி உள்ளது. இப்படம் 248 கோடி வசூலித்தது. நான்காம் இடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்த தர்பார் திரைப்படம் உள்ளது. இப்படம் 238 கோடி வசூல் செய்துள்ளது. இதையடுத்து 187 கோடி உடன் அஜித் ஜோடியாக அவர் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஆறாம் இடத்தை அண்ணாத்த படம் பிடித்துள்ளது. அப்படத்தின் வசூல் 171 கோடியாகும்.
55
நயன்தாராவின் ஹிட் படங்கள்
7வது இடத்தில் சிரஞ்சீவி உடன் அவர் நடித்த காட்ஃபாதர் திரைப்படம் உள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் தெலுங்கில் நயன்தாரா நடித்த படமான இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.108 கோடி வசூலித்தது. 8ம் இடத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஆரம்பம் உள்ளது. அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 101 கோடியாகும். 9-ம் இடத்தில் விக்ரம் உடன் நயன் நடித்த இருமுகன் திரைப்படம் உள்ளது. இதன் வசூல் 94 கோடி. 10வது இடத்தை நயன்தாராவின் சந்திரமுகி திரைப்படம் பிடித்துள்ளது. அப்படம் 89 கோடி வசூல் செய்திருந்தது.