கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த நபர்... திரும்பி ‘என்னடா’னு எகிறிய நயன்தாரா - திருப்பதியில் திடுக் சம்பவம்

First Published | Jun 11, 2022, 1:20 PM IST

Nayanthara : நடிகை நயன்தாரா திருப்பதி கோவில் வளாகத்தில் காலணியுடன் வலம் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை, கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

திருமணம் முடிந்த கையோடு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நேற்று ஜோடியாக திருப்பதிக்கு சென்றிருந்தனர். நடிகை நயன்தாரா மஞ்சள் நிற பட்டுப் புடவையும், இயக்குனர் விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையும் அணிந்து வந்திருந்தனர். அங்கு இருவரும் ஜோடியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தினர்.

Tap to resize

நடிகை நயன்தாரா திருப்பதி கோவில் வளாகத்தில் காலணியுடன் வலம் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து அது எதிர்பாராமல் நடந்த ஒன்று எனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டார்.

இது ஒருபுறம் இருக்க, திருப்பதியில் நடிகை நயன்தாரா கூட்ட நெரிசலில் சிக்கியபோது மர்ம நபர் ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் கோபமடைந்த நயன், உடனடியாக திரும்பி பார்த்து முறைத்து, அந்த நபரிடம் என்னடானு கேட்டு எகிறியுள்ளார். இதையடுத்து சுற்றியிருந்த பாதுகாவலர்கள் உதவியுடன் அங்கிருந்து பத்திரமாக கிளம்பிச் சென்றார் நயன். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... Nayanthara : திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விக்கி - நயன் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்... இது ரொம்ப காஸ்ட்லி ஆச்சே

Latest Videos

click me!