மாஸ்டர் பிளான் போட்ட விக்கி! கோடிகோடியாய் கொட்டி கேரளாவில் புதிய தொழில் தொடங்கும் நயன்!

First Published | Jun 27, 2023, 1:32 AM IST

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவில் புதிய தொழில் ஒன்றை துவங்க உள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

நயன் - விக்கி இருவரும் ஏற்கனவே பல பிஸ்னஸ் செய்து வரும் நிலையில், தற்போது புதிய தொழில் ஒன்றை துவங்க, விக்னேஷ் சிவன் ஐடியா கொடுக்க, கோடிகளை கொட்டி... தொழில் துவங்க நயன்தாரா ஆயத்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா, ஆரம்பத்தில் இருந்தே தான் நடித்து சம்பாதிக்கும், பணத்தில் குறிப்பிட்ட பணத்தை செலவு செய்தாலும், ஒரு பகுதியை பல்வேறு தொழில்களில் இன்வெர்ஸ் செய்து வருகிறார். அதன் படி சென்னையில் சில இடங்களையும், கேரளாவில் சில இடங்களையும் வாங்கி போட்டு ரியல் எஸ்டேட் பிஸினஸை  பல வருடங்களாக செய்து வருகிறார்.

அடேங்கப்பா 'புராஜெக்ட் கே' படத்தில் நடிக்க ஹீரோ பிரபாஸை விட வில்லன் கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Tap to resize

நகைகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், அதில் முதலீடு செய்யாமல், திரைப்பட தயாரிப்பு, திரைப்பட விநியோகம், லிப் பாம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சாய் வாலா என்கிற விரைவு சேவை உணவகங்களில் முதலீடு செய்துள்ளார். இந்த தொழில்களில் அவரின் கணவரான விக்னேஷ் சிவனும் பார்ட்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் திடீர் என புதிய தொழில் பற்றி... நயன்தாராவிடம் கூற... அந்த ஐடியா அவருக்கு மிகவும் பிடித்து போனதால்... கோடிக்கணக்கில் பணத்தை அதில் முதலீடு செய்ய உள்ளாராம்.

ஜவான் பட டீசர் எப்போது? ஷாரூக்கானிடம் நண்பருக்கு வாய்ப்பு கேட்ட ரசிகர்... சுவாரஸ்யமான கேள்விகளுக்கு SRK பதில்!

nayanthara

அதாவது நயன்தாரா, ரியல் எஸ்டேட் பிஸினஸுக்காக கேரளாவில் பல இடங்களை வாங்கி போட்டுள்ளார். சில இடங்கள் மெய்யின் சிட்டியில் உள்ளது. அங்கிருக்கும் இடம் ஒன்றில், அனைத்து வசதிகளும் கொண்ட... பல அடுக்கு மாடிகளுடன் கூடிய, அப்பார்ட்மெண்ட் ஒன்றை கட்டி விற்பனை செய்யலாம் என விக்னேஷ் சிவன் கூற, இந்த பிளான் செம்மையாக இருக்கிறது உடனடியாக செயல் படுத்தலாம் என தீவிரமாக அந்த பணியிலும் இரண்டு விட்டாராம் நயன்தாரா. 
 

Latest Videos

click me!