அடேங்கப்பா 'புராஜெக்ட் கே' படத்தில் நடிக்க ஹீரோ பிரபாஸை விட வில்லன் கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Published : Jun 27, 2023, 01:02 AM IST

 'புராஜெக்ட் கே' படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் இவருக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
16
அடேங்கப்பா 'புராஜெக்ட் கே' படத்தில் நடிக்க ஹீரோ பிரபாஸை விட வில்லன் கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன்  படமான 'புராஜெக்ட் கே' அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து  தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. மொத்த  இந்திய ரசிகர்களாலும்  கொண்டாடப்படும் இப்படத்தில் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள்.
 

26

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது.  இந்நிலையில் இப்படத்தில்  உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது, மிகப்பெரும் ஆச்சர்ய தகவலாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைவது இறுதியான நிலையில், இத்தகவலை  உறுதிப்படுத்தும் வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்.. , 

ஜவான் பட டீசர் எப்போது? ஷாரூக்கானிடம் நண்பருக்கு வாய்ப்பு கேட்ட ரசிகர்... சுவாரஸ்யமான கேள்விகளுக்கு SRK பதில்!
 

36

“50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் இருந்தபோது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் மிகப்பெரிதாக இருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் இணைகிறோம். நம் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த இயக்குநர் இதில் தலைமை வகிக்கிறார். என்னுடைய சக நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய  இந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதற்கு முன் அமித் ஜியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை முதல் முறை போலவே உணர்கிறேன்.  
 

46
Project K

இப்போதும் அமித் ஜி ஒவ்வொரு படத்திலும், தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரது பாதையை தான் நானும் பின்பற்றுகிறேன். ’புராஜெக்ட் கே’  படத்தில் பணியாற்ற ஆவலுடன்  காத்திருக்கிறேன்.  திரையுலகில் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும், பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்து பார்த்தாலும், என்னுடைய முதன்மையான தன்மை, நான் ஒரு திரைப்பட ஆர்வலன் என்பதே. அனைத்து புது முயற்சிகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக அங்கீகரிப்பார்கள். ’புராஜெக்ட் கே’   படத்திற்கு இது என்னுடைய முதல் கைதட்டலாக இருக்கட்டும். எங்கள் இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில், ரசிகர்கள் மத்தியிலும் சினிமா உலகிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

எதிர்நீச்சல் ரேணுகாவா இது? மாலத்தீவில் ஸ்லீவ் லெஸ் உடையில் குதூகலம் பண்ணும் பிரியதர்ஷினியின் ஹாட் போட்டோஸ்!
 

56
Project K

‘புராஜெக்ட் கே’ பன்மொழிகளில் தயாராகும் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாகும்.  வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம்  திரைப்படத் தயாரிப்பு வரலாற்றில் அவர்களின் ஐம்பது புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்யும் வகையில், மிகப்பிரமாண்டமாக கமல், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற தலைசிறந்த நடிகர்களை வைத்து உருவாக்கியுள்ளது.
 

66

இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸை விட, கமல்ஹாசன் அதிகமாக சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபாஸ் நடிப்பில், பாகுபலி படத்திற்கு பின்னர் வெளியான ராதே ஷியாம், சகோ, மற்றும் அதிபுருஷ் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் இந்த படத்தில் நடிக்க தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசனோ இந்த படத்தில் நடிக்க சுமார் 150 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாளவிகா மோகனனின் காதலர் இவரா? பாத் ரூமில் தோளில் சாய்ந்து ரொமான்ஸ் செய்யும் போட்டோஸ் வைரல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories