தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு உயர்ந்துள்ள நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்து தற்போது 5 ஆண்டுகளை கடந்தும் மனம் வீசி வருகிறது.
ஓட்டுமொத்த திரையுலகமே வியக்கும் வகையில் விக்கி - நயன் ஜோடி காதலித்து வருகின்றனர். பிற நடிகைகளைப் போல் காதலை மறைக்காத நயன்தாரா, எங்கு சென்றாலும் விக்கியுடன் தான் காணப்படுகிறார். வெளிநாடு டூ ஷூட்டிங் வரை எங்கு சென்றாலும் இந்த காதல் ஜோடி ஒரு ரொமாண்டிக் போட்டோவை பதிவேற்றி வருகின்றனர்.
அப்படி ஒவ்வொரு முறை விக்னேஷ் சிவன் தன்னுடைய சோசியல் மீடியாவில் ஏதாவது போட்டோவை பதிவிட்டால் ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வி கல்யாணம் எப்போது என்பதாக உள்ளது. இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் சந்தேகத்தை கிளப்பியது.
தன்னுடைய நெஞ்சில் கைவைத்துள்ள நயன்தாராவின் போட்டோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், அவருடைய மோதிரத்தை குறிப்பிட்டு 'விரலோடு உயிர் கூட கோர்த்து' என கேப்ஷன் கொடுத்திருந்தார்.
உடனே நயன் - விக்கிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என ரசிகர்கள் கதற ஆரம்பித்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நயன் விரலில் இருப்பது பழைய மோதிரம் தான் என்பது உறுதியாகியுள்ளது.
அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் நயன்தாரா, விக்கியுடன் தயாரிப்பு பணிகளும் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி எந்த திட்டமும் போடவில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.