தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களாக பலர் வந்தாலும், ஜாம்பவன் என்ற பட்டம் சிலருக்கு மட்டுமே பொருந்தும்.
தில் முக்கியமானவர் 90களில் தமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆட்சி செய்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், புரட்சித் தமிழன் சத்யராஜ் என படத்தின் நாயகர்கள் யாராக இருந்தாலும் அந்த படத்தில் காமெடி நாயகனாக கண்டிப்பாக கவுண்டமனி இருப்பார்.
90களில் கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் இல்லாத படங்களை பார்ப்பது என்பதே அரிது.
அப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவுண்டமணி ஒருபோதும் தன்னுடைய குடும்பத்தை லைம் லைட் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது இல்லை.
அதே போல் இவரை வெளியிடங்களில் பார்ப்பதும் அரிது, அப்படியே வெளியில் வந்தாலும் யாருடனும் சேர்த்து புகைப்படம் எடுத்து கொள்வதை விரும்ப மாட்டார்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன், சத்யராஜின் மனைவி, மகன், மற்றும் மகள் ஆகியோருடன் சேர்ந்து கவுண்டமணி எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதில் சாத்தியராஜின் மகன் சிபி மிகவும் சிறியவராக இருக்கிறார். அவரது தங்கை திவ்யா சத்யராஜ் சிறுமியாக உள்ளார். கவுண்டமணி பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுவது போல் இந்த புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தில், கவுண்டமணி மிகவும் எளிமையாக வெள்ளை வேஷ்டி சட்டையில் உள்ளார்.
கவுண்டமணி மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது ஒரு நகைச்சுவை கெமிஸ்ட்ரி இருக்கும். இருவருக்குமே நக்கல் ஜாஸ்தி என்பதால் இவர்களுடன் நடிப்பவர்களின்பாடு ஒரே திண்டாட்டம் தான். இவர்கள் காம்பினேஷனில் வந்த படங்கள் அப்போதைக்கு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் நடிக்கும் படத்திற்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.