Nayanthara: தண்ணீருக்கு நடுவே... விக்னேஷ் சிவனை கட்டி அணைத்து கொண்டிருக்கும் நயன்! படு ரொமான்டிக் போட்டோ!

Published : Dec 05, 2021, 02:28 PM IST

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர காதல் ஜோடியான நயன் (Nayanthara)  - விக்கியின் (Vignesh shivan) லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தையே சூடாக்கியுள்ளது.  

PREV
17
Nayanthara: தண்ணீருக்கு நடுவே... விக்னேஷ் சிவனை கட்டி அணைத்து கொண்டிருக்கும் நயன்! படு ரொமான்டிக் போட்டோ!

சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது டேட்டிங் செய்வதையும், ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

 

27

அதே போல் தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வரும் இந்த ஜோடி, திருமணத்திற்கும் தயாராகி வருகிறார்கள்.

 

37

பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

 

47

இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு முன் தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நடித்து முடித்து விட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

 

57

சமீபத்தில் கூட நயன்தாரா ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனைக்காக முதலில் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்ட பின்னரே, விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய வேண்டும் என ஜோசியர்கள் அறிவுறுத்தியதாகவும், இதற்கான பூஜையிலும் நயன்தாரா ஈடுபட்டதாக கூறப்பட்டது.

 

67

அதே போல் எவ்வளவு தான் பட வேளைகளில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பிசியாக இருந்தாலும்... ஒருவருக்கொருவர் தங்களுடைய காதல் நேரத்தை செலவிடவும் மறந்து இல்லை.

 

77

அந்த வகையில் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் படு ரொமாண்டிக்காக தண்ணீருக்கு நடுவே போர்ட் ஒன்றில் செல்லும் புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories