சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சுமார் 70 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி, 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்தார். இந்த இரும்பு பெண்மணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் மூழ்கடித்தது. இந்நிலையில், இன்று இவரது 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வருகிறது. எனவே இன்று காலை முதல் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள இவரது நினைவிடத்தில், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் பிற கட்சி தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.