நடிகர் ரோபோ சங்கர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவர் இறக்கும் முன் எவ்வளவு பொருளாதார ரீதியாக கஷ்டபட்டார் என்கிற தகவலை நாஞ்சில் விஜயன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கடந்த செப்டம்பர் 18ந் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கர் 46 வயதில் மரணமடைந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு தனுஷ், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்பட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
24
ரோபோ சங்கர் மறைவுக்கு காரணம் என்ன?
இந்த நிலையில் ரோபோ சங்கரின் மறைவுக்கு பின்னர் அவரது நண்பனும், உடன் பணியாற்றியவருமான நாஞ்சில் விஜயன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். அதன்படி ரோபோ சங்கரின் மறைவுக்கு அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தான் காரணம் என கூறப்பட்டது. அதைப்பற்றிய கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் விஜயன், குடிப்பழக்கம் மட்டுமே காரணம் இல்லை. அதுவும் ஒரு காரணமாக இருந்தது. மேடைக் கலைஞராக இருந்தபோது அவர் உடம்பில் பெயிண்ட் பூசிக் கொண்டது, ஓயாது உழைத்தது எல்லாமும் சேர்த்து தான் அவர் உடல்நலக்குறைவுக்கு காரணமாக அமைந்தது என கூறினார்.
34
ரோபோ சங்கருக்கு உள்ள கடன்
தொடர்ந்து ரோபோ சங்கருக்கு இருக்கும் கடன் பற்றி பேசிய நாஞ்சில் விஜயன், ரோபோ சங்கர் உயிருடன் இருக்கும்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு சரியான வேலை இல்லாமல் இருந்தது. அவர் தற்போது வசித்து வரும் வீட்டிற்கு மாசம் 1 லட்சம் இஎம்ஐ கட்ட வேண்டும். அவர் நம்பி இருந்த பிரபல சேனல் கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நாம் இல்லையென்றால் நம்முடைய குடும்பம் என்ன செய்வார்கள் என்று ஓடி ஓடி உழைத்தார். கடன் சுமையால் தான் இந்திரஜாவும் தனக்கு கிடைக்கும் சிறு சிறு விளம்பர வாய்ப்புகளை கூட ஏற்று செய்து வருகிறார் என நாஞ்சில் விஜயன் கூறினார்.
ரோபோ சங்கர் ஓராண்டுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு 50 லட்சம் செலவானது. அவ்வளவு கஷ்டப்பட்டு தான் அவரை மீட்டு கொண்டு வந்தார் பிரியங்கா அக்கா. கடைசியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கூட மருத்துவ செலவுக்கு காசு இல்லாததால், இந்திரஜா தன்னுடைய தாலியை கழட்டி கொடுத்தார். மாப்ள கார்த்திக்கும் கையில் இருந்த மோதிரம், செயின் ஆகியவற்றை கொடுத்து தான் மருத்துவம் பார்த்தார்கள். இதையெல்லாம் நான் அருகில் இருந்து கண்கூடாக பார்த்தேன் என நாஞ்சில் விஜயன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.