'நாகினி' மௌனி ராய்க்கு விரைவில் டும்... டும்... டும்..!! இவருடைய காதலர் இவரா? வைரலாகும் புகைப்படங்கள்..!!

Published : Oct 01, 2021, 03:53 PM ISTUpdated : Oct 01, 2021, 04:24 PM IST

'நாகினி' சீரியல் நடிகை மௌனி ராய் (Mouni Roy) தனது நீண்டகால காதலரும்,தொழிலதிபருமான, சூரஜ் நம்பியாரை (Suraj Nambiar) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.  

PREV
16
'நாகினி' மௌனி ராய்க்கு விரைவில் டும்... டும்... டும்..!! இவருடைய காதலர் இவரா? வைரலாகும் புகைப்படங்கள்..!!

சமீபத்தில் தான் நடிகை மௌனி தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை, கோவாவில் மிக பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்ட போது, ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்தனர்.

 

26

இதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில் விரைவில் மௌனி ராய் அவருடைய காதலர் சூரஜ் நம்பியாரை ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக. பிரபல தனியார் நாளிதழுக்கு இவருடைய உறவினர் கொடுத்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

 

36

மேலும் இவர்களது திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் திருமண வரவேற்பு சொந்த ஊரான பீகாரில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

46

மௌனி ராய் திருமணம் செய்து கொள்ள உள்ள சூரஜ் நம்பியார் ஒரு தொழிலதிபர். தற்போது  துபாயில் வசித்து வருகிறார். அவர் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மவுனி ராய் கோவிட் 19 தொற்று பரவிய நேரத்தின் பெரும் பகுதியை துபாயில் சுராஜ் நம்பியாருடன் கழித்தார்.

 

56

பல சமயங்களில் இருவரும் இணைந்து, நண்பர்களின் பார்ட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் உண்டு. சுராஜுடனான உறவை நீண்ட காலமாக ரகசியமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

66

இதை தொடர்ந்து இவருக்கு பாலிவுட் ரசிகர்கள் பலர் இப்போதில் இருந்தே தங்களுடைய வாழ்த்துக்களை கூற துவங்கி விட்டனர்.

click me!

Recommended Stories