சமந்தாவை விவாகரத்து செய்தபின்னர் மிகப்பெரிய தொகைக்கு புது வீடு வாங்கிய நாகசைதன்யா! நடிகையோடு குடியேறுகிறாரா?

First Published | Mar 28, 2023, 3:41 PM IST

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், பிரபல டோலிவுட் சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யா மிகப்பெரிய தொகையில், ஹைதராபாத்தில் புதிய வீடு வாங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபுவை 7 ஆண்டுகளுக்கு மேல் உருகி... உருகி.. காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்ட, நாக சைதன்யா, கடந்த 2021 ஆம் ஆண்டு, திடீர் என தங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனம் ஒற்று விவாகரத்து பெற உள்ளதாக ஒரே சமயத்தில் இருவரும் அறிவித்து, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தனர்.
 

சமந்தாவுடன் ஹைதராபாத்தில் இருந்த போது இருவரும், தங்களுக்கு பிடித்தது போல்.. 100 கோடி செலவு செய்து பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கினர். இந்த வீட்டை வாங்க, நாக சைதன்யாவை விட, சமந்தா தான் அதிக பணம் கொடுத்ததாக கூறப்பட்டது. எனவே விவாகரத்து முடிவுக்கு பின்னர் சமந்தாவிடமே அந்த வீட்டை ஒப்படைத்து விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. பின்னர் அந்த வீட்டை சமந்தா விற்பனை செய்து விட்டதாகவும் சில தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

\லோ நெக் ஜாக்கெட்டில்... இன்ஸ்டாகிராமை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்! தாறுமாறு லுக்கில் செம்ம ஹாட் போஸ்!
 

Tap to resize

விவாகரத்து சம்பவத்துக்கு பின்னர், நாகசைதன்யா... அவரின் தந்தை நாகார்ஜுனா வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. அதே போல் சமந்தாவும் வேறு ஒரு வீட்டை வாங்கியதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது நாகசைதன்யா சுமார் 15 கோடியில், ஆடம்பர அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் விரைவில் அந்த வீட்டில் குடியேற உள்ளததாகவும் கூறப்படுகிறது.
 

சில மாதங்களுக்கு முன்பே இந்த அப்பார்மெண்டை நாகசைதன்யா வாங்கிய நிலையில்... கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. மேலும் தன்னைக்கு பிடித்தது போல் இந்த வீட்டை கஸ்டமைஸ் செய்துள்ளார் நாக சைதன்யா. இந்த வீட்டை தன்னுடைய பெற்றோர் வசித்து வரும், ஜூப்லி ஹில்ஸ் பகுதியிலேயே தான் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

AK62 படத்திற்கு முன்பே.. டிஜிட்டலில் வெளியாகும் அஜித்தின் வேற லெவல் படம்! ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்!

சமீப காலமாக நாகசைதன்யா, பிரபல நடிகை சோபிதா துளிபலாவுடன் டேட்டிங் செய்து வரும் நிலையில்... புதிதாக வாங்கிய வீட்டில் தன்னுடைய காதலியோடு குடியேறுவாரா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் நாக சைதன்யா தமிழ் - மற்றும் தெலுங்கில் நடித்துள்ள 'கஸ்டடி' படத்தில் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos

click me!