ஏன் விவாகரத்து செய்தோம்? சமந்தா உடனான விவாகரத்து பற்றி பேசிய நாக சைதன்யா!

Published : Feb 08, 2025, 02:04 PM IST

Naga Chaitanya Talk about Divorce With Samantha in Tamil : சமந்தா உடனான விவாகரத்து குறித்து நடிகர் நாக சைதன்யா முதல் முறையாக பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

PREV
14
ஏன் விவாகரத்து செய்தோம்? சமந்தா உடனான விவாகரத்து பற்றி பேசிய நாக சைதன்யா!
நாக சைதன்யா சமந்தா விவாகரத்து

Naga Chaitanya Talk about Divorce With Samantha in Tamil : நான்கு ஆண்டுகள் காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு சமந்தா உடனான விவாகரத்து குறித்து இப்போது 2ஆவது திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா ஓபனாக பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தாவும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்து மற்றும் கிறிஸ்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

24
விவாகரத்து பற்றி பேசிய நாக சைதன்யா

திருமணத்திற்கு பிறகு இருவரும் ஹனிமூன், சினிமா என்று பிஸியாக இருந்த நிலையில் தான் அவர்களது வாழ்க்கையில் பூகம்பம் வெடித்தது. 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில் நாக சைதன்யா 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். பொன்னியின் செல்வன் படம் மூலமாக பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.

34
சமந்தா உடனான விவாகரத்து பற்றி பேசிய நாக சைதன்யா

இந்த நிலையில் தான் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் தண்டேல் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்போது சமந்தா உடனான விவாகரத்து குறித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்தோம். அதோடு ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறோம். தான் பிரிவதற்கு முன்பு 1000 முறை யோசித்து தான் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார். இதற்கும் மேலாக என்ன விளக்கம் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை. இந்த முடிவுக்கு ரசிகர்களும், ஊடகங்களும் மதிப்பளிக்க வேண்டும். எங்களது முடிவில் தனி உரிமை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

44
சமந்தா உடனான விவாகரத்து பற்றி பேசிய நாக சைதன்யா

இருவரும் கருணையுடன் நகர்ந்து சென்றுவிட்டோம். இப்போது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கிறோம். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்று கூறியுள்ளார். நாக சைதன்யா விவாகரத்திற்கு பிறகு 2ஆவது திருமணம் செய்து கொண்ட நிலையில் சமந்தா இப்போது வரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதல் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories