அந்த பாட்டுக்கு கவுண்டமணிக்கு குரல் கொடுத்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?

First Published | Dec 17, 2024, 8:45 AM IST

Music Director Sirpy Gives Voice to Goundamani in Mettukudi Movie Songs : கவுண்டமணிக்கு குரல் கொடுத்த இசையமைப்பாளர் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Sirpy Gives Voice to Goundamani in Mettukudi Movie Songs

Music Director Sirpy Gives Voice to Goundamani in Mettukudi Movie Songs : தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியை யாராலயும் மிஞ்சவே முடியாது. தனக்கென்று தனி அடையாளத்தையும் வகுத்துக் கொண்டவர். காமெடி மட்டுமின்றி ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். இவரது காமெடி காம்பினேஷன் இல்லாத தமிழ் சினிமாவே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு படங்களில் நடித்துள்ளார்.

Sirpy Gives Voice to Goundamani in Mettukudi Movie Songs

இவருடன் நடிக்காத ஹீரோக்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு எல்லா ஹீரோக்களுடன் கவுண்டமணியுடன் இணைந்து நடித்துள்ளனர். ஹீரோயின்களும் கவுண்டமணியின் காமெடிக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. ஷூட்டிங்ஸ்பாட்டிலேயே அந்தளவிற்கு காமெடி செய்வார் என்று பல மேடைகளில் நடிகர், நடிகைகள் சொல்ல கேள்விப் பட்டிருப்போம்.

Tap to resize

Sirpy Gives Voice to Goundamani in Mettukudi Movie Songs

அப்படிப்பட்ட காமெடி ஜாம்பவானுக்கு ஒருத்தர குரல் கொடுத்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தான். சினிமாவில் மொழி தெரியாத நடிகர், நடிகைகளுக்கு பலரும் டப்பிங் கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு டப்பிங் தெரியாது என்பதால் டப்பிங் கலைஞர்கள் வைத்து அவர்களுக்கு டப்பிங் கொடுப்பார்கள்.

Sirpy Gives Voice to Goundamani in Mettukudi Movie Songs

ஆனால், கவுண்டமணியோ சரளமாக பேசி அசத்தக் கூடியவர். அவருக்கு ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? சாதாரணமாக டயலாக் என்றால் அவரே டப்பிங் பேசியிருப்பார். ஆனால், இது பாடல். அதனால், கவுண்டமணிக்கு இசையமைப்பாளர் குரல் கொடுத்திருக்கிறார்.

Music Director Sirpy Bacground Voice to Goundamani

அதுவும் கார்த்திக் நடித்த மேட்டுக்குடி படத்தில் வரும் இந்த பூந்தென்றால் காற்று என்ற பாடலுக்கு கவுண்டமணிக்கு இசையமைப்பாளர் சிற்பி குரல் கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலில் வரும் நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது என்ற வரிகளை கவுண்டமணி பாடியிருப்பார். இந்த வரிகளுக்கு தான் கவுண்டமணிக்கு சிற்பி குரல் கொடுத்திருப்பார்.

sathyaraj

இவர், சரத்குமார் நடித்த நாட்டாமை படத்திற்கும், கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதோடு தன்னுடைய படங்களில் ஒரு சில பாடல்களையும் இவர் பாடியிருக்கிறார்.

Latest Videos

click me!