சைலன்டாக நடக்கும் திருமண வேலை! அனிருத்துக்கு விரைவில் டும்டும்டும் - பொண்ணு கீர்த்தி இல்லையாம்... அப்போ யாரு?

Published : May 25, 2022, 01:02 PM IST

Anirudh Marriage : கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
14
சைலன்டாக நடக்கும் திருமண வேலை! அனிருத்துக்கு விரைவில் டும்டும்டும் - பொண்ணு கீர்த்தி இல்லையாம்... அப்போ யாரு?

ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் அவரை ஒரே நாளில் உலகம் முழுவதும் பேமஸ் ஆக்கியது. இதையடுத்து இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டானதால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உயர்ந்தார் அனிருத்.

24

தற்போது கோலிவுட்டில் இவர் தான் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வருகிறார். இந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களுக்கு இசையமைத்த அவர், அடுத்ததாக கமலின் விக்ரம், அஜித்தின் ஏகே 62, ரஜினியின் தலைவர் 169 என அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

34

இதுதவிர தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ள புதிய படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளார். இவ்வாறு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அனிருத் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம்.

44

அவர் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அனிருத் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் திரையுலகை சேர்ந்தவர் இல்லை என கூறப்படுகிறது. அவரின் திருமண வேலைகளும் சைலண்டாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... The Gray Man : யம்மாடியோ.. இத்தனை கோடியா..! தனுஷின் ஹாலிவுட் பட பட்ஜெட்டை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories