Arya Captain
ஆர்யா நாயகனாக நடிக்க சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் தான் கேப்டன். அறிவியல் புனைகதையாக இந்த படம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் இன்று முதல் (செப்டம்பர் 30) ஜீ5 ottd தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், மௌனி ராய், நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோர்முக்கிய வேடங்களில் நடித்த பிரம்மாஸ்திரா படத்தை அயன் இயக்கியிருந்தார். ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்ததது. இந்த படம் 410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 9 -ம் தேதி வெளியான இந்த படத்தின் ஓடிடி உரிமையை Disney+Hotstar பெற்றுள்ளது. படம் விரைவில் ஒளிபரப்பாகும்.
விஷால் வீட்டின் மீது கல்வீசி தாக்கியது ஏன்?... கைதான 4 பேர் சொன்ன பகீர் காரணம்
vendhu thanindhathu kaadu
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருந்த வெந்து தணிந்தது காடு படம் பி. ஜெயமோகன் எழுத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இதில் சிம்பு, ராதிகா சரத்குமார், ஏஞ்சலினா ஆப்பிரிக்கா, சித்திக் , நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம், சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது. இதன் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்.... கே.ஜி.எஃப் தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்டம்... விக்ரம் பட நடிகருடன் ஜோடி சேரும் சூரரைப் போற்று நாயகி
Sinam
அருண் விஜய் நடிப்பில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கிய சினம் க்ரைம் திரில்லர் திரைப்படமாக அமைந்து ரசிகர்களை ஈர்த்து இருந்தது. அருண் விஜயுடன், பல்லக் லால்வானி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷபீர் பின்னணி இசையமைத்துள்ளார். படம் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி திரைக்கு வந்தது. இதன ஓடிடி உரிமையை Netflix பெற்றுள்ளது. படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடிக்கு வரும் என்பதால் இந்த மாதம் எதிர்பார்க்கலாம்.
maja ma
மாதுரி தீட்சித், கஜராஜ் ராவ், ரித்விக் பௌமிக், ஷிவா சதா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் நடித்துள்ள மஜா மா திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அக்டோபர் 6 -ம் தேதி Amazon Prime -ல் ஸ்ட்ரீமாக உள்ளது.
ranga ranga vaibhavanga
தெலுங்கு காதல் நாடகத் திரைப்படத்தில் பஞ்ச வைஷ்ணவ் தாஜ், கெட்டிகா ஷர்மா, அலி மற்றும் பலர் நடித்துள்ளனர் உள்ளனர. குழந்தை பருவ நண்பர்கள் தொடர்பான கதைக்களத்தை கொண்ட இந்த படம் அக்டோபர் 2-ம் தேதி Netflix -ல் வெளியாகவுள்ளது.