இவரை தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தின் நடிகர் ஆர்யா நடித்து வெளியான நான் கடவுள் படத்தில் இவரை முரட்டு வில்லனாக நடிக்க வைத்து மிரட்டல் செய்தார்.
தலையில் முடி இல்லாமல் பார்க்கவே வில்லத்தனமாக இருந்த இவருடைய நடிப்பு பலரை கவர்ந்தது. எனவே அடுக்கடுக்காக அடுத்த அடுத்த படங்களில் நடிக்க பிஸியான மொட்டை ராஜேந்திரன்.
இவர் முரட்டு வில்லனாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டாலும், காமெடியிலும் கால் பாதிக்க நினைத்து, பல படங்களில் காமெடி வேடத்தை தேர்வு செய்து நடித்தார். இந்த நடிப்பும் கை கொடுத்ததால் தற்போது பல ரசிகர்கள் இவருடைய காமெடி நடிப்பையும் ரசித்தனர்.
தற்போது இவர் தலையில் முடிகள் இல்லை என்றாலும், இளமை பருவத்தில், தலை நிறைய முடியுடன் தான் இருந்தார் மொட்டை ராஜேந்திரன். அதற்க்கு இந்த புகைப்படமே சாட்சி.
படப்பிடிப்பின் ஒன்றின் போது கெமிகளில் இவர் விழுந்ததால் இவருடைய தலை முடிகள் பாதிக்கப்பட்டு முழுவதுமாக முடி உதிர்ந்து விட்டது. இதனை அவரே சில பேட்டிகளில் கூட தெரிவித்துள்ளார்.
இவருக்கு தலையில் முடி இருந்தால் கூட, இப்படி ஒரு மவுசு வந்திருக்குமா என்பது தெரியாது... முடி இல்லாமல் இருப்பதால் தான் அடித்தது லக்.