உலகில் அதிகம் கொண்டாடப்படும் உறவு என்றால் அது அம்மா தான். ஒரு குடும்பத்தில் அம்மாவின் பங்களிப்பு முக்கியமானது. அப்படிப்பட்ட அம்மா கேரக்டரை தமிழ் சினிமாவில் பல படங்களில் முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி கோலிவுட்டில் அம்மா கேரக்டரில் நடித்து பேமஸ் ஆன டாப் 5 நடிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
26
சரண்யா பொன்வண்ணன்
நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் சரண்யா பொன்வண்ணன். இவர் ஹீரோயினாக நடித்து பேமஸ் ஆனதைவிட அம்மா ரோலில் நடித்ததன் மூலம் தான் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்த சரண்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதுதவிர வேலையில்லா பட்டதாரி, ஓகே ஓகே, களவாணி, எம்.மகன் என இவர் அம்மாவாக நடித்த படங்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.
36
ஊர்வசி
ஊர்வசி கோலிவுட்டில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். ஆனால் இவர் அம்மாவாக நடித்த படங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக சிவா மனசுல சக்தி படத்தில் ஒரு ஜாலியான அம்மாவாக நடித்திருப்பார் ஊர்வசி. பின்னர் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் அம்மாவாக எமோஷனலாக நடித்து அப்ளாஸ் வாங்கினார். பின்னர் ஜே பேபி, மூக்குத்தி அம்மன் என இவர் அம்மாவாக நடித்த படங்கள் அனைத்தும் அமோக வரவேற்பை பெற்றன.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு வெள்ளந்தியான அம்மா கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தக்கூடியவர். குறிப்பாக பாஸ் என்கிற பாஸ்கரன், நாடோடிகள், நான் மகான் அல்ல என இவர் அம்மாவாக நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவர் இயக்குனராகவும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக ஆரோகணம் என்கிற திரைப்படத்தில் அம்மா கேரக்டரை முன்னிலைப்படுத்தி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
56
சிம்ரன்
சிம்ரன் என்றால் இடுப்பழகி என பலரும் கூறுவார்கள். ஆனால் அவரின் நடிப்புக்கு தீனி போட்டது அவர் நடித்த அம்மா வேடங்கள் தான். குறிப்பாக கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தாயாக தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதேபோல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடித்து கவனம் ஈர்த்தார். அண்மையில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திலும் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்த சிம்ரனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
66
ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன், பல விதமான வேடங்களில் நடித்திருந்தாலும், அவரின் பெஸ்டை கொண்டு வந்த படம் பாகுபலி தான். அதில் பிரபாஸூக்கு அம்மாவாக ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்திருந்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னுடைய கம்பீரமான நடிப்பால் கவனம் ஈர்த்தார் ரம்யா கிருஷ்ணன். அதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் இவர் நடித்த அம்மா கேரக்டர் கவனம் ஈர்த்தது.