சன் டிவி சீரியலில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'மூன்று முடிச்சு' தொடர் நாயகி ஸ்வாதி கொண்டே புதிய கார் வாங்கியுள்ள தகவலை அறிவித்துள்ளார். ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெள்ளி திரை நடிகைகளுக்கு நிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர் சின்னத்திரை சீரியல் நடிகைகள். அந்த வகையில் விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகை சுவாதி கொண்டேவும் ஒருவர். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள ஸ்வாதி கொண்டே தனக்கான முதல் காரை வாங்கிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
26
Moondru Mudichu Serial
கர்நாடகாவில் சேர்ந்த சுவாதி கொண்டே, தற்போது பெங்களூரில் வசித்து வந்தாலும் தமிழ் சீரியல்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் சீரியலில் நடிக்க துவங்கும் முன்பு, நான்கு கன்னட படத்தில் நடித்தார். அந்த படங்கள் அனைத்தும், அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. எனவே சின்னத்திரை சீரியல் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது தான், விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'ஈரமான ரோஜாவே' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஸ்வாதி கொண்டே, இந்த சீரியலில் பிரியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனதை கொள்ளையடித்தார்.
46
Meiyazhagan Movie Actress
இதைத்தொடர்ந்து அவ்வப்போது சில தமிழ் படங்களிலும் தலைகாட்டி வரும் ஸ்வாதி கொண்டே, நடிகர் கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' படத்தில் கார்த்தியின் மாமன் மகளாகவும், அரவிந்த்சாமிக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். இது ஒரு சிறு கதாபாத்திரத்திரம் என்றாலும் இவருடைய கேரக்டர் அதிகம் கவனிக்கப்பட்டது.
ஈரமான ரோஜாவே 2 சீரியல் முடிவுக்கு வந்த பின்னர், சன் டிவியில் துவங்கப்பட்ட 'மூன்று முடிச்சு' சீரியலில் நடிக்க துவங்கினார். பிரைம் டைம் சீரியலான, இந்த தொடர் தற்போது TRP-யில் கெத்து காட்டி வருகிறது.
66
Swathi Konde Serial Moondru Mudichu
இந்நிலையில் இந்த சீரியல் துவங்கிய நான்கே மாதமே ஆகும் நிலையில், சுவாதி கொண்டே ஒரு புதிய காரை வாங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.