அந்த வகையில் நேற்றைய தினம் "இந்த படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளதாக போனி கபூர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்".
'வலிமை' படம் துவங்கியதில் இருந்து, படம் குறித்து தினமும் அப்டேட் கேட்டு வந்த நிலையில்... படக்குழுவினர் படம் குறித்த தகவலை தற்போது தான் மெல்ல மெல்ல வெளியிட துவங்கியுள்ளனர்.
மேலும் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் குறித்தும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் யார் என்பது குறித்தும்? சில தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.
அந்த வகையில் தற்போது அஜித் அடுத்ததாக பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கி, நடிக்க உள்ள 'பரோஸ்' என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாக உள்ளது. ஒரு பூதத்தை மையமாக கொண்டு, எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்த நிலையில், இந்த படத்தில் அஜித்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மோகன்லால் அஜித்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அஜித் இந்த படத்தில் நடிக்கிறாராம். சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா? அல்லது முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்த விபரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்த படத்தில் இசையமைப்பாளராக 15 வயது தமிழக சிறுவன் லிடியன் நாதஸ்வரம் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.