பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும், அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன்முறையாக 1 கோடி வசூல் அள்ளிய படம் என்ன என்பதை பார்க்கலாம்.
சினிமாவில் இன்றைய சூழலில் ஒரு படம் 100 கோடி வசூலிப்பது என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் கூட தோல்வியை சந்தித்திருக்கின்றன. அதேவேளையில் விமர்சன ரீதியாக கழுவி ஊற்றப்பட்ட படங்கள் கூட வெற்றி அடைந்திருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான்.
26
தமிழ் சினிமாவுக்கு எட்டாக்கனியாக உள்ள 1000 கோடி வசூல்
இன்று திரையரங்குகளில் ஒரு டிக்கெட் விலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அதன் டிக்கெட்டுகள் பிளாக்கில் 10 ஆயிரம் வரை கூட விற்கப்படுகின்றன. இப்படி ஏட்டிக்கு போட்டியாக டிக்கெட் விலை உள்ளதால் தான் இன்று பான் இந்தியா படங்கள் ஆயிரம் கோடி வசூலை அசால்டாக எட்டி வருகின்றன. தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது இன்று வரை எட்டாக் கனியாகவே உள்ளது.
36
1 கோடி வசூல் அள்ளிய முதல் இந்திய படம்
இன்று ஆயிரம் கோடி என்பது எப்படி கோலிவுட்டுக்கு எட்டாக்கனியாக இருந்ததோ, அதேபோல் ஒரு காலகட்டத்தில் 1 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவுக்கு எட்டாக்கனியாக இருந்தது. அந்த 1 கோடி வசூலை முதன்முதலில் எட்டிய இந்திய படத்தின் பெயர் கிஸ்மத். 1943-ம் ஆண்டு வெளிவந்த இந்த இந்தி திரைப்படம் தன் இந்தியாவில் முதன்முதலில் 1 கோடி வசூல் அள்ளிய திரைப்படமாகும். இப்படத்தின் சாதனையை எட்டிப்பிடிக்க தமிழ் சினிமாவுக்கு 13 ஆண்டுகள் ஆனது.
தமிழ் சினிமாவில் முதன்முதலில் 1 கோடி வசூல் அள்ளிய ஹீரோ எம்ஜிஆர் தான். 1950களில் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வந்த எம்ஜிஆர், தான் நடித்த மதுரை வீரன் படம் மூலம் இந்த மகத்தான சாதனையை படைத்தார். தற்போது பல ஹீரோக்கள் 100 கோடி, 200 கோடி என வசூல் செய்தாலும் பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்திலேயே வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தார் எம்ஜிஆர். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன.
56
மதுரை வீரன் படைத்த சாதனைகள்
அப்படி எம்ஜிஆர் நடித்து வசூலை வாரிக்குவித்த படம் தான் மதுரை வீரன். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலில் 1 கோடி வசூல் அள்ளியது இப்படம் தான். இப்படம் தமிழகத்தில் மட்டும் 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த சாதனை எந்த பிளாக் அண்ட் ஒயிட் படங்களும் முறியடிக்கவில்லை. தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு மற்றும் இலங்கையிலும் இப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
66
வெள்ளிவிழா கண்ட மதுரை வீரன்
எம்ஜிஆர் ஹீரோவாக நடித்து வெள்ளிவிழா கண்ட முதல் திரைப்படம் இதுதான். மதுரை வீரன் திரைப்படத்தை யோகானந்த் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் எம்ஜிஆர் உடன் பத்மினி, பாணுமதி, டிஎஸ் பாலய்யா உள்பட பலரும் நடித்திருந்தார். இன்று பல படங்கள் கோடிகளில் வசூலித்தாலும் அதற்கு முதன்முதலில் பிள்ளையார் சுழி போட்டது எம்ஜிஆரின் மதுரை வீரன் திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.