Chiranjeevi to Play as Prabhas Father in Spirit Movie : மெகாஸ்டார் சிரஞ்சீவி, யங் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கூட்டணியில் மல்டி ஸ்டாரர் படம். சிரஞ்சீவி பவர்ஃபுல் ரோலில், பிரபாஸுக்கு அப்பாவாக நடிக்கிறாரா? இயக்குனர் யார், என்ன படம்? உண்மை என்ன?
மெகாஸ்டார் சிரஞ்சீவி தற்போது தொடர்ச்சியான படங்களில் பிஸியாக உள்ளார். வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் 'விஸ்வம்பரா' என்ற சமூக-கற்பனைப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
26
இதுமட்டுமின்றி, பாபி இயக்கத்தில் 'மெகா 158', ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் 'மெகா 159' ஆகிய படங்களும் தற்போது முன் தயாரிப்பு நிலையில் உள்ளன.
36
பிரபாஸ் நாயகனாக, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட பட்ஜெட் படமான 'ஸ்பிரிட்' படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு முக்கிய கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்.
46
'அனிமல்' படத்தில் பாலிவுட் சீனியர் நடிகர் அனில் கபூர் ஏற்று நடித்த கதாபாத்திரம் எப்படி ஹைலைட் ஆனதோ.. அதே பாணியில், ஒரு வகையில் சொல்ல வேண்டுமானால் அதை விடவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தை சந்தீப் வங்கா சிரஞ்சீவிக்காக எழுதியுள்ளதாக திரையுலகில் பேச்சு.
56
சிரஞ்சீவியை சந்தீப் வங்கா ஏற்கனவே தொடர்பு கொண்டதாக தகவல். மெகாஸ்டாரை வைத்து ஒரு முழு நீளப் படம் இயக்க வேண்டும் என்பது வங்காவின் விருப்பம் ரசிகர்களுக்குத் தெரியும்.
66
இருப்பினும் இந்தத் தகவல் குறித்து படக்குழுவினர் தரப்பில் இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.