தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக “வில்லு” படத்தில் நடித்தார். அப்போது பிரபுதேவாவிற்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபுதேவா, நயனுடனான காதல் காரணமாக மனைவி ரமலத்தை 2011ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்துவாக மாறினார். ஆனால், கல்யாணம் வரை சென்ற இந்த காதல் முறிந்தது. 2012-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
நடிகர் என்பதை கடந்து தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா.
விவாகரத்திற்கு பிறகு முன்னாள் மனைவி ரமலத்துடனும் இணைந்து வாழாத பிரபுதேவ சமீபத்தில் பிசியோதெரபிஸ்ட் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
நடனம் காரணமாக பிரபுதேவாவிற்கு இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் சிகிச்சைக்கு சென்ற இடத்தில் தான் பிசியோதெரபி மருத்துவருக்கும் பிரபுதேவாவிற்கும் காதல் ஏற்பட்டு அது கல்யாணத்தில் முடிந்துள்ளது.
மும்பை சாக்கி நாக்கா பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஹிமானி என்பவரை கரம் பிடித்த பிரபுதேவா தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் இருவரும் வசித்து வருகிறார்களாம்.
நிஜமாவே பிரபுதேவாவுக்கு சென்னையில் மே மாதமே இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது. அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டதில் மகிழ்ச்சி என பிரபுதேவாவின் சகோதரரும், நடன இயக்குநருமான ராஜூ சுந்தரம் தெரிவித்துள்ளார்.