Master Mahendran Reply : மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் மின் தடை குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து பேமஸ் ஆனவர் மாஸ்டர் மகேந்திரன். குறிப்பாக இவர் நாட்டாமை, நட்புக்காக, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதன்பின்னர் விழா என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அண்மையில் ரத்ன குமார் இயக்கத்தில் ரிலீஸ் ஆன 29 திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, அதில் சென்னையில் நிலவி வரும் மின் தடை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து சொல்லி ட்ரோலில் சிக்கினார் மகேந்திரன்.
24
சர்ச்சையில் சிக்கிய மகேந்திரன்
விஜய்யின் தீவிர ரசிகரான மகேந்திரனிடம், தவெக ஆட்சியில் சென்னையில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கரண்ட் போச்சுனா சோலார் சிஸ்டம்னு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்களே, அதை பயன்படுத்துங்கள். சோலார் பேனலை சோலார் சிஸ்டம் என தவறாக சொன்னது மட்டுமின்றி, அடுத்த ஆறு மாசத்துக்கு கரண்ட் கட் பற்றி யாரும் கேள்வி கேட்காதீர்கள் என்றும், கரண்ட் வேண்டுமென்றால் என் வீட்டில் வந்து கரண்ட் எடுத்துக்கோங்க என தெனாவெட்டாக பதிலளித்திருந்தார்.
34
மகேந்திரன் கொடுத்த விளக்கம்
மகேந்திரனின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களையே கொந்தளிக்க வைத்தது. அதுமட்டுமின்றி ஏராளமானோர் அவரின் பேச்சை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தன்னை விமர்சிப்பவர்களை தற்குறிகள் என சொல்லி மறுபடியும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மகேந்திரன். சோசியல் மீடியாவில் நான் பேசியதை ஷார்ட்ஸ் ஆக போட்டதால் அதில் நான் சொன்ன கருத்துக்கள் முழுமையாக இடம்பெறவில்லை. தவறாக சித்தரிக்கப்பட்டு அந்த வீடியோ வைரலாகி வருவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் இல்லை என கூறிய மகேந்திரன், மின் பற்றாக்குறையை சமாளிக்க சூரிய ஒளி மின்சாரம் தான் சிறந்த தீர்வு, கொச்சி விமான நிலையம் முழுவதும் சோலார் உதவியுடன் தான் இயங்குகிறது. அதேபோல் நமது மாநிலத்திலும் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று நான் கூறி இருந்தேன். உண்மை என்னவென்றே தெரியாமல் என்னை ட்ரோல் செய்கிறார்கள். என்னுடைய கருத்தை தவறாக புரிந்துகொண்டவர்கள் தான் தற்குறிகள். என் கருத்தில் நான் எப்போதும் உறுதியாக உள்ளேன் என மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.