கவின் நடிப்பில் உருவான மாஸ்க் முதல் துருவ் விக்ரமின் பைசன் வரை நவம்பர் 21ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கவின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்க். இப்படத்தில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். இப்படத்தை விகர்னன் இயக்கி உள்ளார். இப்படத்தை ஆண்ட்ரியா உடன் சேர்ந்து வெற்றிமாறனும் தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் நவம்பர் 21ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
25
மிடில் கிளாஸ்
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைத்து, அது தொலைந்தால், என்ன நடக்கும் என்பது தான் இப்படத்தின் கதைச்சுருக்கம். இப்படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கி உள்ளார். இப்படத்தில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை விஜயலட்சுமி நடித்துள்ள இப்படமும் நவம்பர் 21ந் தேதி திரைக்கு வருகிறது.
35
தீயவர் குலை நடுங்க
தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரில்லர் படம் தீயவர் குலை நடுங்க. இப்படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இப்படத்திற்கு பரத் இசையமைத்துள்ளார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நவம்பர் 21 அன்று திரைக்கு வருகிறது.
சென்னையில் இருந்து கேரளாவுக்கு பயணம் செய்யும் ஹீரோயினின் 8 நாள் வாழ்க்கை கலர்புல்லாக, உணர்வுபூர்வமாக விவரிக்கும் கதை தான் இந்த யெல்லோ. இதில் பிக் பாஸ் பூர்ணிமா ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குனர் ஹரி மகாதேவன் இயக்கியுள்ள இப்படமும் நாளை தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது.
55
ஓடிடி ரிலீஸ் படங்கள்
ஓடிடியில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்களும் ஒரு வெப் சீரிஸும் ரிலீஸ் ஆகிறது. அதன்படி தீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் நவம்பர் 21ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற பைசன் காளமாடன் திரைப்படமும் நவம்பர் 21 அன்று நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர விஜய் சேதுபதி மகன் சூர்யா, நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான நடு சென்டர் என்கிற வெப் தொடர் இன்று முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.