Manmadha Leelai Review : வெங்கட் பிரபுவின் மன்மதலீலை மஜாவா இருக்கா?... இல்லையா? - முழு விமர்சனம் இதோ

First Published Apr 1, 2022, 9:17 PM IST

Manmadha Leelai Review : மொத்தத்தில் பிட்டுக்கு இடமில்லாத மன்மத லீலை நாயகன் செல்வா போன்ற மன்மதர்களுக்கு நிகழ்வுள்ள கிளைமாக்ஸை சுட்டி காட்டுவதாக அமைந்து விட்டது. 

Manmadha Leelai

அடல்ட் ஸ்டோரியில் இறங்கிய வெங்கட் பிரபு :

தொடர்ந்து ஆக்ஷன் படங்களை தொடர்ந்து அடல்ட் களத்தில் குதித்துள்ளார் வெங்கட் பிரபு. இவர் சமீபத்தில் இயக்கிய மாநாடு நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து தற்போது மன்மத லீலையை இயக்கியுள்ளார். வழக்கமான சிம்புவின் ரோமன்ஸ் இன்றி மாநாடு வெளியானது ரசிகர்ளை கொஞ்சம் திருப்தி படுத்தவில்லை என கூறப்பட்ட நிலையில் மன்மத லீலையில் மொத்த ரொமான்ஸையும் கொட்டி விட்டார் வெங்கட் பிரபு. இதில் பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

Manmadha Leelai

விமர்சங்களை சந்தித்த ட்ரைலர் :

இந்த படத்திலிருந்து முன்னதாக வெளியான ட்ரைலர் கடும் விமர்சங்களுக்கு உள்ளது. இதையடுத்து இயக்குனரும், தயாரிப்பாளரும் மாறி மாறி விமர்சகர்களுக்கு சமாதானம் கூறி வந்தனர். அதோடு எனக்கும் பெண் பிள்ளை உண்டு நான் எப்படி அடல்ட் லவ் படம் எடுப்பேன். இது அந்த மாதிரியான படம் இல்லை என கூறியிருந்தார். ஆனால் படம் உண்மையில் எதிர்மறையாகவே உள்ளது.

Manmadha Leelai

ரோமன்ஸ் மன்னன் அசோக் செல்வன் :

முந்தையகால சிம்பு போல ரொமான்ஸுக்கு பேர் போனவர் அசோக் செல்வன். ஆகா இந்த படத்திலும் ஹாட்டுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.  ஒரு ஹீரோயினியுடன் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் நாயகனுக்கு ஏற்படி மன்மத லீலையில் ஒன்றுக்கு மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.
 

Manmadha Leelai

ரிலீஸ் அவதில் தாமதம் : 

மாநாடு படம் போலவே  இந்த படமும் ரிலீஸ் ஆவதில் சிக்கலை சந்தித்து. வெங்கட் பிரபுவின் முந்தைய படமான மாநாடு படத்திற்காக விடியும் முன்னர் இருந்து திரையரங்கு முன் குவிந்தியருந்த சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதை போல, மன்மத லீலையும் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது காலை 7 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு தான் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Manmadha Leelai

முந்தைய பட சாயல் :

அடுத்தடுத்த படத்தில் முந்தைய படத்தின் சாயலை போட்டிருப்பார் இயக்குனர் என கூறப்படும் வெங்கட் பிரபுவின் மன்மத லீலையிலும் மாநாடு சாயல் இருக்கத்தான் செய்கிறது. அதில் டைம் லூப் வருவது போல, இந்த படத்தில் 2010 முதல் 2020 வரையுள்ள காலகட்டத்தில் நாயகனின் மன்மத லீலைகள் கட்டப்பட்டுள்ளது.

Manmadha Leelai

'ஏ' பட பிரியர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே :

போஸ்டரை பார்த்து படம் பார்க்க சென்ற 'ஏ' பட பிரியர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒரு பிட்டு காட்சி கூட இடம்பெறாத இந்த படத்தில் போதுமான லிப் லாக் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. முந்தைய பிரியாணி படத்தில்  'ஹாங் ஓவர்' என்னும் ஆங்கில படம் போல எடுத்திருந்த வெங்கட் பிரபு இந்த படத்திலும் ஆங்கில பட மோகத்தை திணித்துள்ளதாக ஒரு பேச்சும் உண்டு.

Manmadha Leelai

மூன்று நாயகிகள் :

மூன்று ஹீரோயிகள் உள்ள படத்தில் மனைவியாக ஸ்ம்ருதி வெங்கட் தவிர கள்ள காதலிகளாக வரும் காதலிகளாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் உள்ளிட்டோர் படு கவர்ச்சியை தாராளமாக காட்டியுள்ளனர். அதோடு இவர்கள் ரொமான்ஸுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு.

Manmadha Leelai

நாயகனின் கட்டுக்கடங்கா காதல் :

முதல் பாதியில் கள்ளத்தனமாக உள்ளே வரும் நாயகன் செல்வம் சரக்கிற்கு நாயகியை ஊறுகாய் தொட்டு கொண்டு சின்ன கேப்பில் சைக்கிள் ஓட்டுவது, திருமணத்திற்கு பின்னர் மனைவி வெளியில் சென்ற கேப்பில் தோழியுடன் கிடா வெட்டுவது என வேற லெவல் மனமத லீலையை நடத்தியுள்ளார்.

Manmadha Leelai

மன்மதர்களுக்கு ஆப்பு :

மாநாடு போல ஓட்டுன சீனையே திரும்ப ஓட்டுவது போல தோன்றினாலும் இறுதியில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் பல்டி மேல் பல்டி என ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி விட்டார் வெங்கட் பிரபு. மொத்தத்தில் பிட்டுக்கு இடமில்லாத மன்மத லீலை நாயகன் செல்வா போன்ற மன்மதர்களுக்கு நிகழ்வுள்ள கிளைமாக்ஸை சுட்டி காட்டுவதாக அமைந்து விட்டது. 
 

Latest Videos

click me!