பீஸ்ட் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று அந்த படத்திலிருந்து புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. விஜயின் 3 மாஸ் லுக்குடன் தீ பறக்கும் காட்சிகள் உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு லிஸ்டில் ஒன்றாகி விட்டது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
28
beast
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் இரண்டுமே நல்ல வெற்றியை ஈட்டி தந்தது.
38
beast
இதில் அரபிக் குத்து பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியிருந்தார் புரியாத பாஷையில் இருந்தாலும் ரசிகர்கள் இதை ஏகபோகமாக கொண்டாடினர்.
48
beast
இரண்டாவதாக வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார். ஆனாலும் பாடல் போதுமான வெற்றியை பெற்று தரவில்லை.
58
beast
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
68
beast
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள பீஸ்ட் படம், வரும் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
78
beast
ரிலீஸ் தேதி நெருங்குவதை அடுத்து விஜயின் பீஸ்ட் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாக வருகிறது. அந்த வகையில் முன்னதாக படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
88
beast
இதையடுத்து நாளை படத்தின் ட்ரைலர் வெளியவுள்ளதை அடுத்து பீஸ்ட் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஜயின் 3 மாஸ் லுக்குடன் தீ பறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.