அஜித்தின் ‘ஏகே61’ அணியில் இணையும் மஞ்சு வாரியர்..எங்கு அடுத்த ஷெட்யூல் தெரியுமா ?

Kanmani P   | Asianet News
Published : Jun 16, 2022, 05:19 PM IST

ஏ.கே 61 படத்தின் படப்பிடிப்பு முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், படக்குழு அடுத்ததாக புனே செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
13
அஜித்தின் ‘ஏகே61’ அணியில் இணையும் மஞ்சு வாரியர்..எங்கு அடுத்த ஷெட்யூல் தெரியுமா ?
AK 61

வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தனது 61வது படத்திற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத்துடன் இணைந்துள்ளார். இந்த புதிய திட்டத்திற்கு தற்காலிகமாக ' AK61 ' என்று பெயரிடப்பட்டு  படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஹைதராபாத்தில் நடந்த நிலையில், படக்குழு அடுத்ததாக புனே செல்ல உள்ளனர். மேலும் நடிகை மஞ்சு வாரியர் அஜித் 61 அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23
AK 61

AK61 இன் அடுத்த ஷெட்யூல் ஒரு வாரத்தில் புனேயில் தொடங்கும் என்றும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் படத்தின் படப்பிடிப்பை முடிக்க குழு திட்டமிட்டுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், இப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

33
AK 61

இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும். நடிகர் அஜித் குமார் ‘வலிமை’ படத்தில் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றத்தில், ‘ஏகே61’ படத்தில் நீளமான தாடியுடன் நடிக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று நடிகர் அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories