Manjima Mohan :தாறுமாறாக குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய மஞ்சிமா... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Ganesh A   | Asianet News
Published : Feb 08, 2022, 01:46 PM IST

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம குண்டாக மாறியுள்ள மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது.

PREV
16
Manjima Mohan :தாறுமாறாக குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய மஞ்சிமா... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, "அச்சம் என்பது மடமையடா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். 
 

26

அந்த படத்தை தொடர்ந்து, 'சத்ரியன்', 'இப்படை வெல்லும்', 'தேவராட்டம்', துக்ளக் தர்பார் என வரிசையாக பல படங்களில் நடித்தார். ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. 

36

எனினும் தற்போது இவரின் கைவசம், தமிழில் 2 படங்களே உள்ளன. அதில் ஒன்று விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர், மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது.

46

இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் மஞ்சிமா. இதுதவிர அவர் கைவசம் வேறு எந்த படங்களும் இல்லை. அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததற்கு அவர் உடல் எடை கூடியதே காரணம் என கூறப்படுகிறது.

56

சினிமாவில் அறிமுகமான புதிதில் குண்டாக இருந்த மஞ்சிமா மோகன், பின்னர் பட வாய்ப்புகளை பிடிக்க தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் குண்டாகி உள்ளதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

66

சமீபத்தில் நடந்த எஃப்.ஐ.ஆர் படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட மஞ்சிமா, கொழுகொழுவென்று குண்டாக இருப்பதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம குண்டாக மாறியுள்ள மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories