அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.
28
abhirami
வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
38
abhirami
விருமாண்டியில் அன்னலட்சுமியாக வந்து அபிராமி ரசிகர்களின் மனதை பெரிதும் வென்றிருந்தார்.. ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் வீர மங்கையாக இவர் நடித்திருந்தார்..
48
abhirami
இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.
58
abhirami
இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
68
abhirami
அபிராமி..மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.
78
abhirami
திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன அபிராமி, ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட அவர் சமூக வலைதளங்களில் அதிக பாலோவர்களை பெற்றார்.
88
abhirami
இந்நிலையில் இன்ஸ்டா விளையாட்டில் பிரிந்த பிறகு முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா என கேள்வி வந்திருக்கிறது. அதற்கு இல்லை என்று கூறி கொஞ்சம் வெட்கப்பட்டுள்ளார் அபிராமிக்கு.