மஞ்சிமா மோகன், நடிகர் கெளதம் கார்த்தியுடன் இணைந்து நடித்த 'தேவராட்டம்' படத்தில் இருந்தே... இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, இது குறித்த செய்திகள் வெளியான போது தொடர்ந்து, இந்த தகவலை மறுத்து வந்த மஞ்சிமா மோகன் ஒருவழியாக இப்போது தன்னுடைய காதலை உறுதி செய்துள்ளார்.