Manivannan : என்ன... மணிவண்ணன் நக்சலைட்டு ஆதரவாளரா?.. பகிர் கிளப்பும் நடிகர்...

Kanmani P   | Asianet News
Published : Dec 27, 2021, 11:58 AM ISTUpdated : Dec 27, 2021, 12:01 PM IST

Manivannan : மணிவண்ணன் கல்லூரி காலத்திலேயே நக்சலைட்டு உடன் தொடர்பில் இருந்தவர் என நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

PREV
110
Manivannan  : என்ன... மணிவண்ணன் நக்சலைட்டு ஆதரவாளரா?.. பகிர் கிளப்பும் நடிகர்...
manivannan

manivannan : இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மணிவண்ணன்.

210
manivannan

manivannan : 1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான மணிவண்ணன், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர்.

310
manivannan

manivannan : பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார்.

410
manivannan

manivannan : மணிவண்ணனின் உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார்

510
manivannan

manivannan : ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். 

610
manivannan

manivannan :  ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.

710
manivannan

manivannan : தனது 50 வது படமாக  ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்னும் படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். 

810
Bayilvan Ranganathan

Bayilvan Ranganathan : நடிகராக இருந்து தற்போது பத்திரிக்கையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் இணைய தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் மறைந்த இயக்குனர் மணிவண்ணன் பற்றி பல தகவல்களை கூறியுள்ளார்.

910
manivannan

manivannan : சத்யராஜ்-கவுண்டமணி-மணிவண்ணன் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். சத்யராஜ் மட்டுமே கவுண்டமணியை அண்ணன் என்பார். மணிவண்ணன்-கவுண்டமணி பரஸ்பரம் வாடா போடா என்று தான் பேசிக்கொள்வார்கள். படத்தை விட, அவர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில் காமெடி அதிகம் இருக்கும் என்று பயில்வான் கூறியுள்ளார்.

1010
manivannan

manivannan : மணிவண்ணன் கல்லூரி காலத்திலேயே நக்சலேட் உடன் தொடர்பில் இருந்தவர். மஜூந்தார் என்கிற நக்சலுடன் தொடர்பில் இருந்ததாக அவரே என்னிடம் கூறியுள்ளார் என்றும்  பயில்வான் கூறியுள்ளார்.

click me!

Recommended Stories